எச்.ராஜாவை கைது செய்ய தனிப்படை: முன் ஜாமீன் கிடைக்குமா?
நீதிமன்றம், காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நேற்று 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து எச்.ராஜா உள்பட 8 பேரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் எச்.ராஜா கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
எச். ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக ஆய்வாளர் மனோகரன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முன்னதாக திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர். அவர்களின் மீது சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.