எச்.ராஜாவை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை: தங்கதமிழ்செல்வன்

எச்.ராஜாவை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை: தங்கதமிழ்செல்வன்

நீதிமன்றத்தையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசால் முடியாவில்லை என்று அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தங்கதமிழ் செல்வன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியாபோது, ‘ நீதிமன்றத்தையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச் ராஜாவை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் முடியாவில்லை

இதற்கு என்ன காரணம் என்றால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்த்து, முதலமைச்சர் பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது என்பதே ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை ஏற்கனவே அம்முக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply