முதல்வர் பழனிசாமி விளக்கம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல புதிய மாவட்டங்கள் தோன்றிய நிலையில் இனி எந்த மாவட்டம் பிரிக்கப்பட்ட மாட்டாது என முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை பிரித்து பவானி மற்றும் எடப்பாடி மாவட்டம் உண்டாகும் என்ற தகவல் வெளியானது தவறானது என்றும் தமிழகத்தில் இனி எந்த மாவட்டம் பிரிக்கப்பட்ட மாட்டாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியுள்ளார்
மேலும் முழு ஊரடங்கு கூடுதலாக அமல்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து இனி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோன்ற இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது