எடுப்பான கோலத்துக்குத் தேங்காய்
மணலை மெல்லிய கண் உள்ள சல்லடையில் சலித்து, அதனுடன் கலர் கோலமாவைச் சேர்த்து கோலமிட்டால் சீராகப் பரவும்.
# கல் உப்புடன் கலர் பொடியைக் கலந்து கோலத் துக்கு வண்ணமடித்தால் பளிச்சென்று தெரியும்.
# பால் எடுத்தத் தேங்காய்ப் பூவை உலரவைத்து அதில் கலர் பொடியைக் கலந்து கோலம் போட்டால் எடுப்பாகத் தெரியும்.
# பன்னீர் கரும்பின் சக்கையைக் காயவைத்து, அரைத்து அதிலும் கலர் பொடியைக் கலக்கலாம்.
# மீந்து போன பிரட் துண்டுகள், ரஸ்க் துண்டுகளை உலர்த்தி, அவற்றுடன் கலர் பொடி கலந்து கோலம் போடலாம். ரசாயனம் இல்லாத இயற்கையான கலர் பொடியைப் பயன்படுத்தினால் அது எறும்பு போன்றவற்றுக்கு உணவாக அமையும்.
# கலர் பொடியைத் தூவி முடித்த பிறகு கடைசி யாக வெள்ளைக் கோல மாவைப் பட்டையாகத் தீட்டினால் கோலம் தெளிவாகத் தெரியும்.
# கோல மாவுடன் அரிசிமாவைக் கலந்தால் கோலம் பளிச்சென்று தெரியும்.
# புள்ளி வைக்காமல் ரங்கோலி வரையும்போது கோலப் பொடியைத் தவிர்த்து சாக்பீஸ் கொண்டு வரைந்தால் அழித்து வரைய எளிதாக இருக்கும். பஞ்சு, காப்பி வடிகட்டி, மெல்லிய துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி கலர் பொடியைத் தூவினால், கோலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறம் படியும்.
# மரத்தூள் கிடைத்தால், அதிலும் கலர் பொடியைக் கலந்து பயன்படுத்தலாம்.