எடை குறைய சில சுவையான உணவுகள்

எடை குறைய சில சுவையான உணவுகள்

food_2282528fஎல்லோருக்கும் தெரிந்த உடற்பயிற்சி முறை ஒரு வழியாக இருப்பினும் நம் உணவு பயிற்சியும் அதற்கு வழிவகுக்கும் எனவே உடல் எடையை குறைக்க உதவும் சில உணவு பழக்கங்களை பார்க்கலாம்.

எடை குறைய சில சுவையான உணவுகள்
இன்று இளைஞர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். அதிலும் பெண்களுக்கு இது மானப்பிரச்சனையாகிவிடுகிறது. உடல் பருமனாக இருப்பதில் உள்ள உடல் பிரச்சனைகளைவிட அது மற்றவர்கள் பார்வைக்கு கேளிக்கூத்தாகி அதனால் ஏற்படும் மன பிரச்சனை பூதாகரமாக வளர்கிறது.

அதனால் எடை குறைப்பு என்பது இன்று பெரும்பாலானோருக்கு அவசியமான ஒரு விஷயமாகிறது. எல்லோருக்கும் தெரிந்த உடற்பயிற்சி முறை ஒரு வழியாக இருப்பினும் நம் உணவு பயிற்சியும் அதற்கு வழிவகுக்கும் எனவே உடல் எடையை குறைக்க உதவும் சில உணவு பழக்கங்களை பார்க்கலாம்.

பொதுவாக நாம் உண்ணும் உணவில் ருசிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதில் உள்ள சத்துக்களுக்கு கொடுப்பதில்லை. இதுவே உடல் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாகிவிடுகிறது.

முதலில் பச்சையாக உண்ணும் காய்கறிவகைகள், லேசாக வேக வைத்து உண்ணும் சாலட் வகைகள் இவைகளை நாம் சாப்பிட பழக வேண்டும். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உப்பு. உப்பு என்பது சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது காய்கறியில் உள்ள சத்தை குறைத்துவிடும். அதனால் கூடுமானவரை உப்பை குறைத்து பயன்படுத்துங்கள்.

பீட்ரூட் :

பீட்ரூட்டை கழுவி சுத்தப்படுத்தியபின் அதை மைக்ரோஓவனில் வேகவைத்து எடுத்து தொலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி அதில் சிறிதளவு எலும்மிச்சை சாறு பிழிந்துவிட்டால் பீட்ரூட் சாலட் ரெடி. இதே பீட்ரூட்டை பயன்படுத்தி ராய்தா செய்ய விரும்பினால், குக்கரில் எண்ணையை விட்டு கடுகையை பொரித்து தோலுரித்து துண்டுகளாக்கிய பீட்ரூட்டை அதில் போட்டு உடன் இஞ்சியை துண்டுகளாக்கி அதனுடன் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். அதனுடன் ஏடு இல்லாத பாலில் தோய்த்த தயிரை சேர்த்து கிளரிவிட்டால் ராய்தா ரெடி. இது சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

வெள்ளரி : வெள்ளரியில் ராய்தா தயாரிப்பது இன்னும் சுலபம். வெள்ளரியை சிறு துண்டுகளாக நறுக்கியபின் அதில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் உருவான தயிரை சேர்க்க வேண்டும். அதை நன்றாக கலக்க வேண்டும். அதில் கொத்துமல்லி தழைகளை போட்டு பின் அதில் ஒரு துண்டு பச்சை மிளகாய் போட்டு, கடைசியாக சுவை வேண்டுபவர்கள் சிறு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளரி ராய்தா போலவே அதை சட்னியாக செய்தும் சாப்பிடலாம்.

சிறிய துண்டுகளாக்கிய வெள்ளரியுடன் கொஞ்சம் இஞ்சி துண்டு, கொத்துமல்லித்தழை, சிறிது உப்பு, சிறிய துண்டு பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அரைத்த சட்டினியில் சிறிய அளவு எலும்மிச்சை சாரை பிழிந்துகொண்டால் சுவையான சட்டினி தயார்.

இதே முறையை பின்பற்றி அவரவர் விருப்பதிற்கு ஏற்ப காரட், முட்டைக்கோசு, வெங்காயம், முள்ளங்கி, தக்காளி பீட்ரூட் என்று பல வகையான சட்னி தயாரிக்கலாம். இவை நாம் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் தேய்ங்காய் சட்னியைப்போல் அல்ல. இது கொழுப்பு சத்து அற்றது. உடல் எடையை குறைப்பதில் இந்த சட்டினி வகைகளும் நமக்கு உதவம். எனவே அவைகளை டயட் சட்னி என அழைக்கலாம்.

புடலங்காய் :

புடலங்காய் என்றதும் பலருக்கு கூட்டுதான் நியாபகம் வரும். அது வடை பாயாசத்தோடு விருந்து உண்ணுபவர்களுக்கான ஐட்டம். இங்கே நாம் பார்க்கப்போவது அதே புடலங்காயை வைத்து ராய்தா எப்படி செய்வது என்பதைதான். சிறுதுண்டுகளாக நறுக்கிய புடலங்காயை லேசாக சமையல் எண்ணையை விட்டு மூன்று நிமிடம் வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் பொடி தூவி கிளறிவிட்டு இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின் தனியாக கடுகு தாளித்து அதில் கறுவேப்பிலை சேர்த்து அதை வதக்கி வைத்த புடலங்காயில் சேர்த்துகொண்டால் சுவையாக இருக்கும்.

தக்காளி :

தக்காளியை சமைக்காமல் சாப்பிடலாம். அதை சிறய துண்டுகளாக்கி கொத்துமல்லித் தழையை நறுக்கி அதன் மேல் தூவி விட்டு. சிறதளவு எண்ணையில் கடுகு தாளித்து அதில் போட்டு, கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்து, ஏடு நீக்கிய பாலில் உருவான தயிர் சேர்த்தால் அது தக்காளி ராய்தா.

இவை தவிர சில பழரசங்களும் உடல் பருமனை குறைக்க பயன்படும். அவை பற்றி தெரிந்துகொள்வோம்.

வெஜிடெபுள் சாறு : இது சூடாக பருகும் பானம். தக்காளி, பசலைக்கீரை, பீட்ரூட், இந்த காய்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ சேர்த்து இவற்றுடன் இரு துண்டு பூண்டு, சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், காய்கறிச் சாற்றை பிடிவைத்த கறிச்சட்டியில் கொட்டி, பூண்டுத்துணுக்குகளையும் சேர்த்து 3 – 4 நிமிடங்களுக்கு கொதிக்க விடவேண்டும். மிளகுத்தூள் , உப்பு சேர்த்து கிளரினால் பரிமாறலாம்.

பச்சை காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக்கி முளைகட்டிய பருப்புக்களுடன் கலந்து சாலட் தயாரிக்கவும் முழுமையான சாப்பாடாகவோ சிற்றுண்டியாகவோ பயன் படுத்தலாம்.

ஆப்பிள் இஞ்சி பானம் : சிவப்பான ஆப்பிள்கள் 2, ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி விழுது, ஒன்றரை சிட்டிகையளவு சமையல் சோடா, ஒன்றரை கிளாஸ் தண்ணீர். ஒரு ஆப்பிளை பிளெண்டரில் போட்டு சாறு எடுக்கவும். இஞ்சி விழுது, சமையல் சோடா ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். ஆப்பிள் இஞ்சி கலவையைத் தண்ணீரில் கொட்டி கிளறி, மற்றோர் ஆப்பிளை மெலிதாக சீவித் துண்டுகளாக்கி சாப்பிடுவதற்கு முன் பழச்சாற்றில் மிதக்க விட வேண்டும்.

ஆப்பிள் வெள்ளரி ஷேக் : முதலில் இதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அவை – புளிப்பான 2 ஆப்பிள்கள், 5 வெள்ளரித் துண்டுகள், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, அரை டம்ளர் தண்ணீர்.

இப்போது ஷேக் செய்ய தயாராகுங்கள். ஆப்பிளை துண்டுகளாக்கி வெள்ளரி, தண்ணீர் சேர்த்து எலுமிச்சை சாறுடன் அடித்து கலக்கினால் ஆப்பிள் வெள்ளரி ஷேக் தயார்.

பைனாப்பிள் காக்டெய்ல் :

இனிப்பில்லாத அன்னாசிச் சாறு இரண்டு டம்ளர், 2 ஆப்பிள்கள், தேன் ஒரு கரண்டி, செர்ரிக்கள் ஆப்பிள்களைச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அன்னாசிச் சாற்றுடன் பிளெண்டரில் அடித்து கலக்கியபின் தேன்விட்டுக்கலக்கிவிடட்டால் பைனாப்பிள் காக்டெய்ல் ரெடி . பறிமாறுவதற்குமுன் செர்ரி துண்டுகளால் அலங்கரிக்கலாம்.

Leave a Reply