எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம்: ரூ.2.75 கோடி அபராதம்
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இந்திய நாட்டின் டான் காஞ்சிபுரம் கப்பலும், ஈரான் நாட்டின் மேப்பில் என்ற சரக்கு கப்பலும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. அதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால், எண்ணூர் பகுதிக்குட்பட்ட மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கடந்த இரண்டு ஆண்டுகள் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது எண்ணெய் கப்பலுக்கு ரூ.2.75 கோடி அபராதம் விதித்து கடலோர காவல் படை உத்தரவு பிறப்பித்துள்ளது
இதுகுறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மேப்பில் கப்பல் நிறுவனம் சார்பில் 203 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது