எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார்: அமைச்சர் விஜயபாஸ்கர்
முதல்வரின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அவர் மீது அவதூறு பரப்பி வருவதாகவும், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் குறித்த வீடியோ ஒன்றும் முதல்வர் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை கூறி வரும் நிலையில் முதல்வரும் அமைச்சர்களும் இதுகுறித்து அவ்வ்வப்போது விளக்கம் அளித்து வருகின்ரனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘பொங்கல் பரிசு உள்ளிட்ட முதல்வரின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. வரவேற்பு பெறுவதை பொறுக்காமல் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். அவதூறுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார்’ என்று கூறினார்