எந்த அளவிற்கு ரஜினி மீது வன்மம் உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறதா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தூத்துக்குடி விசாரணை கமிஷனிடம் அளித்த மனுவில் ’எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாகவும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீது விரைவில் முடிவெடுக்க விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது
இந்த நிலையில் தூத்துக்குடிக்கு தான் நேரில் வந்தால் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று ரஜினி கூறியதாகவும் ரஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் கூடும் இடத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றால் அவரது ரசிகர்கள் அனைவரும் சமூக விரோதிகளா? என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர்
ரஜினி என்ன சொன்னாலும் அதில் ஏதாவது நெகட்டிவ் கருத்தைக் கூறலாம் என்று காத்திருக்கும் ஒரு சிலர் தான் இம்மாதிரியான வதந்திகளை பரப்பி வருகின்றனர். பொதுவாக ஒரு நட்சத்திரம் வெளியே வந்தாலே அவர்களை பார்க்க கூட்டம் கூடுவது வழக்கம் தான். அதுவும் ரஜினி போன்ற மாஸ் ஸ்டார் வந்து விட்டால் அவரை பார்ப்பதற்காக ஏகப்பட்ட கூட்டம் கூடும். அந்நேரம் ஏற்படும் தள்ளுமுள்ளு காரணமாக சில அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதை மனதில் வைத்துதான் ரஜினி, தான் நேரில் வந்தால் சட்டம் ஒழுங்கு செய்து விட வாய்ப்பிருக்கிறது என்று கூறினார் இதை வைத்து ரஜினியை வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால் இதனை அப்படியே அவருக்கு எதிராக திருப்பி ரஜினி ரசிகர்கள் அனைவரும் சமூக விரோதிகளா என்று கூறி ரஜினி மீது எந்த அளவுக்கு அவர்கள் வன்மம் வைத்துள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
மேலும் தூத்துக்குடி போராட்டத்தின் போது அவர் போராடிய அப்பாவி மக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை. போராட்டத்தில் திட்டமிட்டு கலவரம் செய்ய வந்தவர்கள் தான் சமூக விரோதிகள் என்று கூறினார்., இது அனைவருக்கும் தெரியும் இருந்தும் ரஜினி மீது வேண்டுமென்றே குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே செய்திகளை திரித்து தன்னைத்தானே பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒரு சிலர் இவ்வாறு பரப்பி வருகின்றனர்