எந்த திருப்பமும் இல்லை: 5 நாள் பரோல் முடிந்து பெங்களூர் திரும்பும் சசிகலா
பெங்களூர் சிறையில் இருந்து கணவரின் உடல்நிலையை பார்க்க ஐந்து நாள் பரோலில் வந்த சசிகலா, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சர்களை வளைத்து போட திட்டம் வைத்திருப்பார் என்றும் கருதப்பட்டது
ஆனால் ஒருசில அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்ததாக செய்திகள் வெளியானதே தவிர சசிகலாவால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக ஒருசில அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க விரும்பவில்லை என்று கூறி போனை வைத்துவிட்டதாக கூறபடுகிறது.
எனவே ஐந்து நாள் பரோல் முடிந்து இன்று மீண்டும் பெங்களூர் திரும்பும் சசிகலா சோகத்துடன் செல்லவிருப்பதாக அவரது வட்டாரங்கள் வெளிப்படையாக புலம்பி வருகின்றன
மேலும் சசிகலா சென்னையில் இருந்து ஐந்து நாட்களில் உறவினர்கள் சொத்து பிரச்சனை தலைவிரித்து ஆடியதாகவும், அரசியல் மற்றும் குடும்ப பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாமல் சசிகலா விரக்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.