எந்த துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம்?
2018-ம் ஆண்டு உங்கள் கல்லூரி படிப்பை முடித்துப் பட்டம் பெற இருக்கிறீர்களா? பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இந்திய வேலை வாய்ப்பு சந்தை மந்தமாக இருந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. நடப்பு ஆண்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லர்னிங் உள்ளிட்ட துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளன. அதிலும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகம் மற்றும் சேவை துறையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் முக்கியத் துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், ஸ்டீல்,சிமெட்ண்ட், மின்சாரம் மற்றும் ஐடி ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் பெறலாம்.
2018-ம் ஆண்டின் முதல் காலாண்டினை விட இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பு சந்தை வளர்ச்சி அடைய்ம் என்றும் அதில் தொழில்நுட்பங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உற்பத்தித் துறை மற்றும் நிலக்கரி துறையில் 7 முதல் 4 சதவீதம் வரை வேலை வாய்ப்புச் சரிவு இருந்தாலும் சேவை துறைகளில் நிதி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்வித் துறையில் எல்லாம் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
சர்வதேச அளவில் தைவான், ஜப்பான்,ஹங்கேரி மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும், அதே நேரம் இத்தாலி, செக் குடியரசு மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு மிகக் குறைவான அளவில் தான் கிடக்குமாம்.