எந்த தொகுதியில் போட்டி: கனிமொழி எம்பி பேட்டி

எந்த தொகுதியில் போட்டி: கனிமொழி எம்பி பேட்டி

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன

இந்த நிலையில் திமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருந்து வரும் கனிமொழி எம்பி, இம்முறை லோக்சபா எம்பியாக தேர்தலில் போட்டியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் அனேகமாக தூத்துகுடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த கனிமொழி எம்பி, திமுக சார்பில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறினார்.

மேலும் எய்ட்ஸ் பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தால் 2 பெண்கள் பாதிக்கப்பட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply