எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
தீபாவளி பண்டிகை என்றால் இனிப்பும் பட்டாசுகளும் தான் ஞாபகம் வரும். ஆனால் ஒவ்வொரு வருடமும் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டு பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஒருசிலர் இடையூறு செய்து வருகின்றனர்.
நாட்டில் சுற்றுச்சூழல் பல காரணங்களால் கெட்டுப்போய்க்கொண்டு இருக்கும் நிலையில் ஒரே ஒரு பட்டாசு வெடிப்பதால் மொத்த சுற்றுச்சூழலும் அதனால் தான் கெடுவதாக ஒருசிலர் நினைப்பதுண்டு
அந்த வகையில் சுற்றுச்சூழல் காரணமாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் நேற்று வெளியிட்ட உத்தரவு ஒன்றில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை பட்டாசு வெடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.