என்னை கொலை செய்ய டிரம்ப் சதி: வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

என்னை கொலை செய்ய டிரம்ப் சதி: வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு


என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்த கொலைகார சதிக்கும்பல்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும், எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு டிரம்ப் மற்றும் கொலம்பியா அதிபர் இவான் டியூக் தான் பொறுப்பு என்றும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைநகர் கராக்கசில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியின் போது, ஆளில்லா விமானங்கள் மூலம் அதிபர் நிகோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார் என்பதும் இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply