என்னை விசாரியுங்கள், என் மகனை விட்டுவிடுங்கள்: ப.சிதம்பரம்
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அந்நியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்குக் கைமாறியதில் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு தொடர்பு உண்டு என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், “ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ தவறான தகவல்களைப் பரப்புவது வருத்தமளிக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, திட்ட ஒப்பந்தத்துக்கு நான்தான் அனுமதி அளித்தேன். ஆனால், இது தொடர்பான விசாரணையில் என்னை விசாரிக்காமல் என் மகனைத் தொந்தரவு செய்யாதீர்கள்” எனக் கூறினார்.