என்பிபிஏ நடவடிக்கையால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை 35% குறையும்
தேசிய மருந்து விலை கட்டுப் பாட்டு ஆணையம் (என்பிபிஏ) உயிர்காக்கும் மருந்துகள் சிலவற் றுக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் ஹெச்ஐவி தடுப்பு மருந்துகளின் விலை 35 சதவீத அளவுக்குக் குறையும் என்று கூறப்படுகிறது.
என்பிபிஏ வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிக்கையின்படி, உயிர்காக்கும் மருந்துகள் (என்எல்இஎம்) பட்டியலில் 23 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கான உச்சபட்ச விலையை என்பிபிஏ நிர்ணயம் செய்கிறது. இதன்படி முக்கிய நோய் எதிர்ப்பு மருந்தான டாக்சி சைக்ளின் (100 மி.கி) மருந்தும் இந்தப் பட்டியலில் உள்ளது.
இந்தப் பட்டியலில் மெல் பலான் (2 மிகி), மெல்பலான் (5 மிகி) ஆகிய மருந்துகள் ரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் மருந்து களாகும். கருப்பை மற்றும் மார்பக புற்று நோய்க்கும் இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
வைரஸ் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஜிடோ வுடைன் (300 மிகி), லாமிவுடைன் (150 மிகி), ஜிடோவுடைன் பிளஸ் (300 மிகி) ஆகிய மருந்துகள் ஹெச்ஐவி நோய் தொற்றைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் மருந்துகளாகும். இவற்றுக்கான திருத்தப்பட்ட உச்சபட்ச விலை யையும் என்பிபிஏ வெளியிட்டுள் ளது. கூடுதலாக மருந்துகளின் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ததற்காக என்பிபிஏ-வுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.4,551 கோடி செலுத்த வேண்டும். இத்தொகை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச அளவாகும்.
428 அத்தியாவசிய மருந்து களின் விலையை என்பிபிஏ குறைத்துள்ளது. இதில் கடந்த சனிக்கிழமை 24 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் அரசு மேற்கொண்ட முயற்சியால் நோயாளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4,988 கோடி அள வுக்கு மருந்துக்கு கூடுதல் செலவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
இத்தகவல் கடந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.