எய்ட்ஸை விட கொடுமையானது இதுதான்; லட்சுமி ராமகிருஷ்ணன்
சமீபத்தில் வெளிவந்த அருவி திரைப்படம் ‘எய்ட்ஸ்’ நோய் குறித்த விரிவான விழிப்புணர்வை கூறி வந்த நிலையில் எய்ட்ஸ் நோயை விட கொடுமையானது ஒன்று உள்ளது என்றும், அது என்ன என்பது குறித்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணாக, அதுவும் வெளிப்படை தன்மை பேசுபவராக, மீடியாவில் உள்ளவராக, ஓரளவு வெற்றிய அடைந்தவராக, பிராமணச் சமூகத்தில் பிறந்தவராக, அதிலும் பாலக்காடு ஐயர் உச்சரிப்பு கொண்டு தமிழ்நாட்டில் வாழ்வது என்பது எச்.ஐ.வியால் பாதிப்படைவதை விடவும் கொடுமையானது. இந்த வைரஸ் குறித்து யாராவது ஏன் படம் எடுக்கக் கூடாது? இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவர்களை ஏன் கடத்தக்கூடாது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென ஜாதி குறித்து பேசியுள்ளதால் இந்த டுவீட் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒருசிலர் இந்த டுவீட்டை ஆதரித்தும் பெரும்பாலானோர் இந்த டுவீட்டுக்கு மாற்றுகருத்தையும் கூறி வருகின்றனர்.