எய்ட்ஸ் நோய் குணமான உலகின் 2வது மனிதர்
எய்ட்ஸ் நோய் என்றாலே அதற்கு மருந்தே இல்லை, மரணம் ஒன்றுதான் முடிவு என்ற நிலை இருந்த நிலையில் உலகில் இரண்டாவது நபர் ஒருவர் எய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த எய்ட்ஸ் பாதித்த ஒருவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இதன் பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்தவருக்கு 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஹெச்.ஐ.வி வைரஸ் முழுவதுமாக நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய் அறிகுறி இல்லையென்றாலும் எய்ட்ஸ் முற்றிலுமாக இந்த நபரைவிட்டு நீங்கியதா என்பதை சில காலம் கழித்துத் தான் அறிய முடியும் என்கிறார் பேராசிரியரும் ஆய்வாளருமான ரவீந்திர குப்தா.