எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை

கல்லூரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு (டி.என்.செட்-2018) வரும் 18-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்
.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதில் நெட் தேர்வை பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலமாக நடத்தி வருகிறது. செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் யுஜிசி-யிடம் அனுமதிபெற்று நடத்தும்.

தமிழகத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மார்ச் 4 இல் தேர்வு: வரும் மார்ச் 4 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. வரும் 18-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப். 9 கடைசி நாளாகும்.

மொத்தம் 21 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், காரைக்குடி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் அமைக்கப்படும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

கட்டணம்: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி (கிரீமி லேயர்) பிரிவினருக்கும் ரூ.1500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி (கிரீமி லேயர் அல்லாதவர்) பிரிவினருக்கு ரூ.1250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnsetexam2018mtwu.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply