எலிக்கறியை முயல்கறி என விற்கும் டாஸ்மாக் பார்! குடிமகன்கள் அதிர்ச்சி

எலிக்கறியை முயல்கறி என விற்கும் டாஸ்மாக் பார்! குடிமகன்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள ஒருசில டாஸ்மாக் பார்களில் எலிக்கறிகளை சமைத்து அதனை முயல்கறி என ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவலால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் எலிகளை பிடித்து வேட்டையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அப்போது எலிகள் டாஸ்மாக் பாருக்கு சப்ளை செய்யப்படுவதாக அந்த நபர் கூறியதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உண்மைதானா? அல்லது புரளியை கிளப்ப வைரலாக்கப்படுகிறது என புரியாமல் குடிமகன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Reply