எல்ஐசி பங்குகளை விற்பதா? போராட்டத்தில் இறங்கும் தொழிற்சங்கங்கள்
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை ஒரு பகுதியை பங்கு சந்தைகள் மூலம் விற்கப்படும் என்று அறிவித்தார்
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் இந்த நிலையில் இதுகுறித்து அனைத்து இந்திய காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் கூறியதாவது:
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். முதல் கட்டமாக வரும் 3 அல்லது 4-ம் தேதி ஒரு மணிநேரம் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். அதன்பின் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்வோம். எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்வது என்பது எளிதான விஷயம் அல்ல. அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.
ஏர் இந்தியா போன்ற நிறுவனத்தை விற்க முன்வந்து யாரும் வாங்க முன்வராததால், ப்ளூசிப் நிறுவனமான எல்ஐசியை விற்கத் துணிந்துவிட்டது அரசு. எங்களின் போராட்டத்துக்கு பொதுத்துறை காப்பீடு நிறுவன ஊழியர்களும் ஆதரவு அளிப்பார்கள்”