எல்லை மீறிய மீம்ஸ்கள்: 7 கோடி டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
சமூக வலைத்தளங்களில் தற்போது மீம்ஸ்கள் என்ற புதுவகையான கலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை மீம்ஸ் போட்டு விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றன. சில சமயம் இந்த மீம்ஸ்கள் எல்லை மீறுவதால் பரபரப்பு ஏற்பட்டதும் உண்டு.
இந்த நிலையில் ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமான சித்தரிக்கப்படும் சுமார் 7 கோடி டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிபாக அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைந்த பல மீம்ஸ்கள் கொண்ட அக்கவுண்டுக்கள் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.