எல்லோரும் சவுக்கியமா? அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 7 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நலமா மோடி? என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் “எல்லோரும் சவுக்கியமா…? என தமிழில் நலம் விசாரித்த பிரதமர் மோடி பின்னர் பேசியதாவது:
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 ஆக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தி உள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் மூலம் ஊழலை கட்டுப்படுத்தி வருவதாகவும், 3 லட்சம் போலி நிறுவனங்களை இனம் கண்டு அவற்றை மூடியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மிக ஆர்வமாக வாக்களித்துள்ளதாகவும், புதிய இந்தியாவின் கனவுகளை நிறைவேற்ற இந்தியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்றும்,
புதிய நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்தில் நிறுவன பதிவு தற்போது வழங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.