ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு: ‘பிகில்’ பட வசூல் எவ்வளவுன்னு தெரிஞ்சிடுமா?
விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கி ‘பிகில்’ திரைப்படத்தின் வசூல் ரூபாய் 300 கோடியைத் தாண்டியது என சினிமா டிராக்கர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிரடியாக வருமானவரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர்
இந்த ரெய்டின் முடிவில் ‘பிகில்’ படம் உண்மையாகவே எவ்வளவு வசூல் செய்தது? அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா? அல்லது நஷ்டமா? என்பது தெரிந்துவிடும் என கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்
ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் காரணமாக ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருவதாகவும் ஒரே நேரத்தில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது