ஏன் ஆஜராகவில்லை? விஷாலுக்கு நீதிபதி கண்டனம்

ஏன் ஆஜராகவில்லை? விஷாலுக்கு நீதிபதி கண்டனம்

1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாத வழக்கில் 10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என நடிகர் விஷாலுக்கு பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரூ1 கோடி வரை சேவை வரி செலுத்தாத வழக்கில், நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது.

இதில் கடந்த 17-ஆம் தேதி ஆஜரான விஷால் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலிடம், 10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என நீதிபதி மலர்மதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஷால் இது, தன்மீது தொடரப்பட்ட பொய்யான வழக்கு என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply