ஏபிஎஸ் வசதி கொண்ட விலை குறைந்த மோட்டார்சைக்கிள்

ஏபிஎஸ் வசதி கொண்ட விலை குறைந்த மோட்டார்சைக்கிள்

இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையின் 150-160சிசி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக சுசுகி ஜிக்சர் இருக்கிறது. சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடல் வெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்துள்ளது. பைக்அட்வைஸ் மூலம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களுடன் புதிய சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடல் இந்தியாவில் விலை குறைந்த ஏபிஎஸ் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி ஏபிஎஸ் யூனிட் கொண்ட ஜிக்சர் பார்க்க ஜிக்சர் SF போன்றே காட்சியளிக்கிறது. சுசுகி ஜிக்சர் மாடலின் முன்பக்கம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டிருக்கிறது. இதே செட்டப் சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலிலும் வழங்கபப்ட்டிருக்கிறது.

ஜிக்சர் ஸ்டேன்டர்டு மாடலின் பின்புறம் டிரம் பிரேக், பின்புறம் டிஸ்க் பிரேக் தேர்வு செய்யும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. தற்போதைய ஸ்டேன்டர்டு ஜிக்சர் மாடலின் விலை ரூ.77,015 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடலின் விலை ரூ.80,929 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடல் பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடலை விட ரூ.7,000 வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்த வரை சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் தற்போதைய மாடலை போன்று காட்சியளிக்கும் என்றும் முன்புற மட்கார்டில் ஏபிஎஸ் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய ஏபிஎஸ் மோட்டார்சைக்கிள் விலையை கட்டுக்குள் வைக்க ஜிக்சர் ஏபிஎஸ் மாடலில் கார்புரேட்டர் செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஜிக்சர் SF ஏபிஎஸ் மற்றும் இன்ட்ரூடர் ஏபிஎஸ் மாடல்களில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் வழங்கப்படுகிறது. சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடலில் 154.9 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த இன்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே திறன் சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின் படி 125சிசி திறன் கொண்டு அனைத்து இருசக்கர வாகனங்களிலும் குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்க வேண்டும். ஏபிஎஸ் அம்சம் எவ்வித இருசக்கர வாகனத்திலும் மிகமுக்கிய பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. இந்த விதிமுறை 2019-ம் ஆண்டு அமல்படுத்தப்பட இருக்கிறது.

Leave a Reply