ஏப்ரல் 18ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தலா?

ஏப்ரல் 18ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தலா?

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறித்துள்ளார்.

எனவே வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வந்துவிட்டால் அதன்பின்னர் இந்த தொகுதியில் தேர்தல் நடத்த தடையேதும் இருக்காது என்பதால் திருப்பரங்குன்றத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply