ஏழு பேர் விடுதலை: அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அற்புதம்மாள் பதில்
ராஜீவ் கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலைக்காக மக்கள் சந்திப்பு இயக்கத்தின் சார்பில் பேரறிவாளனின் தாயார் ஒவ்வொரு மாவட்டமாக ஊர்வலமாக சென்றுவருகிறார். ஒவ்வொரு ஊராக சென்று அனைவருடனும் கலந்து பேசி, இறுதியில் ஆளுநர் கையொப்பமிடவில்லை என்றால் அனைவரும் ஒன்று சேர வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசு தான் பெற்றுத் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தான் பாஜகவை அணுக எந்த அவசியமும் இல்லை என தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பையே ஆளுநர் ஏன் மதிக்கவில்லை என்பது தனக்கு தெரியவில்லை என்றார். இதில் அ.தி.மு.க மெத்தனமாக இருக்கிறதா? சுறுசுறுப்பாக இருக்கிறதா? என்பது தனக்கு தேவையில்லாத பிரச்சனை என்றார்.
எழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக குறிப்பிட்ட அவர், மக்களாகிய நாம் அளித்த வாக்கு பிச்சையை வைத்து தான் அவர் அமைச்சரவையில் இருக்கிறார் என கூறியுள்ளார்