ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு 2 பில்லியன் டாலர் கொடுத்த அமேசான் நிறுவனர்
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் முதலிடத்திலுள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2 பில்லியன் டாலரை ஏழைக்குழந்தைகளின் பாலர் கல்விக்காகவும், வீடற்றவர்களின் உணவுக்காகவும் செலவிடத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, தன்னுடைய செல்வத்தின் ஒரு பகுதியைக் கொண்டு மக்களுக்கு எந்த வகையில் உதவலாம் என டிவிட்டரில் கருத்துக் கேட்டிருந்தார் ஜெஃப் பெசோஸ். 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துக்களில், பெரும்பாலானவை கல்வி மற்றும் வீடற்றவர்களுக்கு உதவும் வகையிலேயே இருந்தது.
இந்நிலையில், 200 கோடி அமெரிக்க டாலர்களை பாலர் கல்விக்காக பள்ளிகளை நிர்வகிக்கவும், வீடற்ற ஏழைகளின் உணவு, உறைவிடத்துக்காகவும் செலவிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.