ஏழை மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட்: மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார் ஓ.பி.எஸ் என்றும், இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல என்றும் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் நிலையில் வருவாயை பெருக்குவதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்றும், பொருளாதாரத்தில் அரசின் தோல்வியையே பட்ஜெட் காட்டுவதாக கூறிய ஸ்டாலின்,
திவாலான கம்பெனியைப் போன்ற சித்திரத்தையே பட்ஜெட் வழங்குவதாகவும் தெரிவித்தார்.