ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தன்னாட்சி’ டுவீட்: அரசியல் உலகில் பரபரப்பு

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தன்னாட்சி’ டுவீட்: அரசியல் உலகில் பரபரப்பு

பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினாலும் கிடைக்காத பரபரப்பை ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே ஒரு வார்த்தையில் போட்ட டுவீட் பெற்றுள்ளது

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் AUTONOMOUS என்ற ஒரு வார்த்தையை பதிவு செய்து அதற்கு கேம்பிரிட்ஜ் டிக்ஸ்னரியில் எந்தவொரு முடிவையும் சொந்தமாகவும், சுதந்திரமாகவும் எடுக்கும் அதிகாரம்’ என்று பொருள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவீட் தமிழக அரசியலை மறைமுகமாக குத்திக்காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தி திணிப்பு குறித்து அவர் பதிவு செய்த இரண்டு டுவீட்டுக்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த டுவீட் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply