ஐஐஎம்-ல் ஆராய்ச்சி உதவியாளர், நர்சிங் உதவியாளர், எல்டிசி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
லக்னோவில் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை கல்வி மையத்தில் (ஐஐஎம்) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sr.Research Assistant – 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடி துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பல்கலைக்கழகம், நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sr.Nursing Assistant – 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து 1 – 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கண்டிப்பாக நிறுவன வாளாகத்திற்குள்ளே வசிக்க வேண்டும்.
பணி: LDC – 03
வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தகைளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 – 2 ஆண்டு சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: www.iiml.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CHIEF ADMINISTRATIVE OFFICER
Indian Institute of Management
Prabandh Nagar,
IIM Road, Lucknow – 226 013
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2016
மேலும் கல்வித் தகுதி, பணி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iiml.ac.in/wp-content/uploads/2016/06/Advt-IIM-Lucknow-REVISED.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.