ஐஐடி-யில் பாடமாக்கப்படும் ‘வாஸ்து சாஸ்திரம்’

ஐஐடி-யில் பாடமாக்கப்படும் ‘வாஸ்து சாஸ்திரம்’

கட்டடக்கலைப் படிப்பில், வாஸ்து சாஸ்திரத்தை ஒரு பாடமாக்க, ஐஐடி கார்க்பூர் முடிவுசெய்துள்ளது. கட்டடக்கலை மாணவர் ஒவ்வொருவரும் வாஸ்து சாஸ்திரம் அறிய ஏற்பாடு செய்துவருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காரக்பூர் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி), ‘வாஸ்து சாஸ்திரம்’ பாடத்தைக் கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு, ‘கட்டடக்கலை பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் வாஸ்து சாஸ்திரம் தெரிந்திருக்க வேண்டும்’ என்று விரும்புவதாக, ஐஐடி தெரிவித்துள்ளது. இதனால் கட்டடக்கலைப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாயப் பாடமாக இந்தக் கல்வி வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.

பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் இந்தக் காலத்தில், சர்வதேச அளவிலான நுட்பங்களைக் கற்றுவரும் கட்டடக்கலைப் பிரிவு மாணவர்கள், இந்தியப் பாரம்பர்யமான வாஸ்து சாஸ்திரத்தைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென ஐஐடி கார்க்பூர் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நிறுவனம் கூறுகையில், வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த பிரிவுப்பாடம் அல்ல என்றும், கட்டடக்கலையை மேலும் அறிந்துகொள்வதற்கான பாரம்பர்யக் கல்வியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் பழைமையான கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூர், ‘வாஸ்து சாஸ்திரம்’ அறியாமல் நல்ல கட்டடக் கலைஞராக உருவாக முடியாது எனத் தீர்க்கமாக நம்புவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply