ஐஐடி வேலைவாய்ப்பு முகாம்: 729 பேருக்கு பணி வாய்ப்பு

ஐஐடி வேலைவாய்ப்பு முகாம்: 729 பேருக்கு பணி வாய்ப்பு

சென்னை ஐஐடியில் நடைபெற்ற முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாமில் 729 மாணவ, மாணவிகள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 1 முதல் 13 -ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் இஸ்ரோ, இந்திய கடற்படை, ஒஎன்ஜிசி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட 176 நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களைத் தேர்வு செய்தன.

கடந்த ஆண்டைப் போலவே, 60 சதவீத மாணவர்கள் இம்முறையும் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

முகாமில் பதிவு செய்த 1,195 மாணவ, மாணவிகளில் 729 பேரை நிறுவனங்கள் பணிக்காகத் தேர்வு செய்துள்ளன. இதில், குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் 9 பணி வாய்ப்புகளையும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்கள் 43 மற்றும் புதிய நிறுவனங்கள் 137 பணி வாய்ப்புகளையும் அளித்துள்ளன.

அடுத்தகட்ட வேலைவாய்ப்பு முகாம், ஜனவரி 2 -ஆம் வாரத்துக்குப் பின்னர் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply