ஐக்கிய அரபு எமிரேட் கொடுத்த ரூ.700 கோடியை இந்திய அரசு மறுத்ததா?
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதத்திற்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலக நாடுகளும் உதவி செய்து வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி கேரளாவுக்கு வெள்ள நிவாரணியாக அறிவித்தது. இதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்தார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய ரூ.700 கோடியை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு எங்களிடம் உள்ள வளங்களை வைத்தே கேரளாவை மறுசீரமைத்து கொள்வோம் என்று மத்திய அரசு பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2004ஆம் சுனாமி தாக்கியபோது அமெரிக்கா எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்று கூறியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், எங்களிடமே மறுசீரமைப்புக்கு பணம் உள்ளது என்று கூறி அமெரிக்க உதவியை ஏற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது