ஐக்கிய அரபு எமிரேட் கொடுத்த ரூ.700 கோடி: இந்தியா மறுக்க என்ன காரணம்?

ஐக்கிய அரபு எமிரேட் கொடுத்த ரூ.700 கோடி: இந்தியா மறுக்க என்ன காரணம்?

கேரள மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படும் நிலையில் மத்திய அரசு ரூ.600 கோடி முதல்கட்ட நிவாரண பணிக்கு கொடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கோடிக்கணக்கில் கேரள அரசுக்கு நிதி வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி கேரளாவுக்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை பெற வேண்டுமானால் மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிதியை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளார் ராவேஷ் குமார் கூறுகையில், ’பேரிடர் நிவாரண நிதியாக மற்ற நாட்டு அரசுகள் அளிக்கும் நிதியுதவியை பெறக்கூடாது எனும் கொள்கையை கடந்த 2013-ம் ஆண்டு உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, வெளிநாட்டு அரசுகளின் நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்ற கொள்கை காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் தனிப்பட்ட நிதியுதவியை மட்டுமே இந்திய அரசால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் அடிப்படையில் தற்போது கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள ரூ.700 கோடி, கத்தார் அறிவித்துள்ள ரூ.35 கோடி மற்றும் மாலத்தீவுகள் அறிவித்துள்ள ரூ.35 லட்சம் நிவாரண நிதியை அரசால் பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply