ஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தி கொலை செய்த 4 பேர் சமீபத்தில் என்கவுண்டர் செய்து கொலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
இந்த என்கவுண்டர் சரியா தவறா என்று ஒருபுறம் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
இந்த வழக்கின் விசாரணையின்போது மறு உத்தரவு வரும்வரை என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளின் உடல்களை பதப்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி குற்றவாளிகளின் நால்வர் பிணங்களுக்கு 7,500 ரூபாய் மதிப்புள்ள விசேஷ ஊசியை வாரம் ஒருமுறை செலுத்தி போலீசார் பதப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது