ஐதராபாத்தில் பரவும் ‘டைம் பாஸ்’ திருமணம்: அரபு ஷேக்குகளின் அட்டகாசம்

ஐதராபாத்தில் பரவும் ‘டைம் பாஸ்’ திருமணம்: அரபு ஷேக்குகளின் அட்டகாசம்

ஐதராபாத்தில் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வரும் அரபுஷேக்குகள் டைம் பாஸ் திருமணம் செய்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சுற்றுலாவுக்காக இந்தியா வரும் அரபுஷேக்குகள் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும்போது புரோக்கள் அவர்களை அணுகி டைம்பாஸ் திருமணம் செய்ய உதவியாக உள்ளனர். சுமார் 20 சிறுமிகளை ஷேக்குகள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்கின்றனர். அவர்களை ஒருவர் ஷேக்கு தேர்வு செய்வாராம். தேர்வு செய்யும் சிறுமியின் பெற்றோருக்கு ரூ.10000, தேர்வு செய்யப்படாத சிறுமியின் பெற்றோர்களுக்கு ரூ.300 கொடுப்பாராம்

பின்னர் திருமண ஏற்பாடுகள் செய்யப்படும்.திருமணம் தினத்தன்றே ஷேக்கு நாடு திரும்பும் நாளில் முன்கூட்டியே விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து போட்டுவிடுவாராம். அவர் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் வரை தேர்வு செய்த சிறுமியை பயன்படுத்திவிட்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டு நாடு திரும்பிவிடுவார். இதுபோன்ற டைம்பாஸ் திருமணங்கள் ஐதராபாத்தில் அதிகம் நடப்பதாகவும் இதனை தடுத்த நிறுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply