ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் சர்வதேச விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயண திட்டத்தை வெளியிட்டுள்ளன. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 7 விமானங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றுடன் வருபவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து தற்போது விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வந்தே பாரத் விமானங்கள் மட்டுமே பெங்களூர் கொச்சி போன்ற நகரங்களில் இயக்கப்பட்டு வந்த நிலையில் நான்கு மாதங்களுக்குப் பின்னர் சென்னை விமான போக்குவரத்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.