ஐபோனில் பரவும் பயங்கர வைரஸ்: ரீஸ்டார்ட் ஆவதால் பரபரப்பு
உலகம் முழுவதும் ஐபோன்களுக்கு என ஒரு மதிப்பு இருந்து வரும் நிலையில் தற்போது ஐபோன் பயனாளிகளை மிரட்டும் ஒரு வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் அடிக்கடி ஐபோன்களை ரீஸ்டார்ட் செய்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களை பாதிக்கும் புதிய வைரஸ் ஒன்று பரவி வருவதாக ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களை பாதிக்கும் வகையில் இணையப்பக்கம் ஒன்று பரவுவதாகவும் ஐபோன் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.. இந்தப் பக்கத்திற்கான லிங்க்கை ஐபோன் மூலம் கிளிக் செய்தால், அது போனை தானாகவே ரீ-ஸ்டார்ட் செய்யும். மேக் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் சஃபாரி புரவுசர் மூலம் கிளிக் செய்தால் புரவுசர் ஸ்தம்பித்துவிடும்.
சப்ரி என்பவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளீயிட்டுள்ளார். ஆப்பிள் தயாரிப்புக்கும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களின் இயங்குதளங்களில் உள்ள வெப்கிட்டில் ல் உள்ள குறைப்பாட்டை பயன்படுத்தி இந்த ஹேக் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகமாகியுள்ள ஐபோன்கள் வரை எந்த ஆப்பிள் தயாரிப்பையும் இது பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் | ஆப்பிள் | Webkit | Web attack | restart your iphone | iPhone | IOS | CSS | apple