ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவது எப்படி?

ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவது எப்படி?

p64aநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” நக்கீரர் சொன்ன இந்தச் சொற்கள், இன்று திருவிளையாடல் படம் காரணமாக மிகவும் பிரபலம். பலரும் அது என்ன நெற்றிக்கண் என்று கேட்பது உண்டு. அது கடவுளுக்கு மட்டும் உள்ளது என்று நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், மனிதர்கள் அனைவருக்கும் நெற்றிக்கண் உள்ளது… ஆனால், மறைவாக உள்ளது. ஏழு சக்கரங்களில் ஆறாவதாக மலரும் ஆக்ஞா சக்கரம்தான் அந்த நெற்றிக்கண். இது இரு கண்களுக்கு இடைப்பட்ட நெற்றிப்பொட்டில் அமைந்திருக்கிறது.

குழந்தைப் பருவம் முடிந்து, விவரம் புரியும் 13 – 17 வயதில் இந்தச் சக்கரம் மலரும். கருநீல வண்ண இதழ்கள் உடைய இந்தச் சக்கரம் மூளையின் ஒரு பாகமான பிட்யூட்டரி சுரப்பியைச் சார்ந்தது. ஆண், பெண் இரு பாலருக்கும் இந்தப் பருவத்தில் சில மன மாறுதல்கள் ஏற்படும். உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்ற எல்லா சக்கரங்களையும் இயக்கும் சக்தி உடையதால், இந்தச் சக்கரத்துக்கு ஆக்ஞா என்று பெயர். இதைச் சார்ந்த பிட்யூட்டரி சுரப்பி, உடலில் உள்ள எல்லா ஹார்மோன் சுரப்பிகளையும் சமநிலையில் இயங்கச் செய்வதால், இதற்கு மாஸ்டர் சுரப்பி என்று பெயர்.

ஆராவில் உள்ள ஆக்ஞா சக்கரமும் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியும் ஒருங்கிணைந்து இயங்கும்போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆக்ஞா சக்கரம் மலரும் பருவத்தில், புதிய விஷயங்களைக் கற்பது, அதைப் பற்றி விரிவாக ஆய்வுகள்செய்வது என்று மனவளர்ச்சியையும், ஞாபகசக்தி, புத்திக்கூர்மையையும் பலப்படுத்த வாய்ப்பைத் தேடிக்கொள்வார்கள், இந்தத் தேடல் பருவத்தில் மனதை அலையவிடாமல் ஒருமுகப்படுத்த பெற்றோர், ஆசிரியரின் கண்காணிப்பு மிகவும் அவசியம்.

மூளை, ஐம்புலன்கள், ஆக்ஞா சக்கரத்தைச் சார்ந்தவை. மூளை என்பது பல்லாயிரக்கணக்கான நியூரான் செல்களால் ஆனது. அறிவு வளர்ச்சியால் இந்த செல்கள் பல மடங்கு பெருகும். இதனால், மூளை வளர்ச்சி அடையும். இதனால், ஐம்புலன்களின் சக்தியும் பெருகுவதால், மன வளர்ச்சி, ஞாபகசக்தி, புத்திக்கூர்மை அதிகரிக்கும். ஆகையால், பள்ளிப் பருவத்தைத் தாண்டி, கல்லூரிக்குச் செல்லும் இந்த வளர்ச்சிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்த, பெற்றோரின் கண்காணிப்பு தேவை. மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசமே ஆறாவது அறிவை உபயோகித்து, ஐம்புலன்களின் ஆற்றலையும் அறிய முடிவதுதான். மனிதனால் ஐம்புலன்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும்.

வயதானவர்களுக்கு ஞாபகமறதி, தூக்கமின்மை, மனஉளைச்சல் போன்ற வியாதிகளுக்கு, ஆங்ஞா சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளிக்கலாம். சிலர், ஞாபகமறதி மிகவும் தீவிரமாகி, டிமென்ஷியா, அல்சைமர் முற்றிய நிலையில் வருவார்கள். இவர்களுக்கு, எல்லா சக்கரங்களையும் சம நிலைக்குக் கொண்டுவந்து ரெய்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.உடலில் உள்ள ஒவ்வொரு ஹார்மோன் சுரப்பியையும் தூண்டும் பணியை பிட்யூட்டரி செய்கிறது என்று மருத்துவம் சொல்கிறது. தைராய்டு, தைமஸ், கணையம், ஓவரி/டெஸ்டிஸ், அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் ஆக்ஞா சக்கரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இவற்றில் எந்தச் சுரப்பியின் குறைபாட்டையும் ஆக்ஞா சக்கரத்துக்கான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். அதேபோல, கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு என ஐம்புலன்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் ஆக்ஞாவுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் பலன் பெறலாம்.

Leave a Reply