‘ஐரா’ என்றால் என்ன அர்த்தம்: படகுழுவினர் விளக்கம்

‘ஐரா’ என்றால் என்ன அர்த்தம்: படகுழுவினர் விளக்கம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சர்ஜூன் இயக்கியுள்ள ‘ஐரா’ திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலான ‘ஐரா’ என்றால் என்ன அர்த்தம் என்பதை படக்குழுவினர் விளக்கியுள்ளனர்.

‘இந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு வெள்ளை யானை. யானைகள் அதன் அசாதாரணமான நினைவுத்திறனாலும், அறியும் திறனாலும் தன் வஞ்சத்திற்கு பழிதீர்த்து கொள்ளும் என்று படக்குழுவினர் டைடிட்லுக்கு விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த விளக்கத்தில் இருந்து இந்த படத்தின் கதை நயன்தாரா தன்னுடைய அறிவுத்திறனால் எதிரிகளை புத்திசாலித்தனமாக பழிவாங்குவதுதான் என்று ஊகிக்கப்படுகிறது

நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.

Leave a Reply