ஐ.எஸ்.ஐ பெண் பயங்கரவாதிக்கு குழந்தை பிறந்தது! சொந்த நாடு திரும்ப விருப்பம்

ஐ.எஸ்.ஐ பெண் பயங்கரவாதிக்கு குழந்தை பிறந்தது! சொந்த நாடு திரும்ப விருப்பம்

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த ‌ஷமீமா பேகம் என்ற மாணவி இணையதளம் மூலம் ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டதால் கடந்த 2015-ம் ஆண்டு திடீரென சிரியா சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார். அதுமட்டுமின்றி ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒருவரை அவர் திருமணமும் செய்துகொண்டார்.

தற்போது சிரியாவில் ஐ.எஸ். இயக்கம் தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட நிலையில், ‌ஷமீமா பேகம் அங்குள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார். சமீபத்தில் அவர், தான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது குழந்தைக்காக சொந்த நாடு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் ‌ஷமீமா பேகம் நாடு திரும்ப அனுமதி அளிக்க முடியாது என இங்கிலாந்து அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அகதிகள் முகாமில் ‌ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply