ஐ.ஏ.எஸ் நேர்முக தேர்வுக்கு தமிழக அரசு சிறப்பு பயிற்சி
ஐஏஎஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழகத்தைச் சார்ந்த மாணாவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்படு செய்துள்ளது.
மத்திய தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் முதன்மை தேர்வில் தகுதி பெற்ற தமிழ் நாட்டை சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி பேராசிரியர் கே.எம். பதி மற்றும் ஏப்ரல் 9-ஆம் தேதி திரு. டி. உதய சந்திரன், இ.ஆ.ப. அவர்களால் ஆளுமைத் தேர்வு சம்பந்தமான சிறப்புவகுப்புகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 8, (முற்பகல் மற்றும் பிற்பகல்) ஏப்ரல் 9 (பிற்பகல்) , ஏப்ரல் 10 (முற்பகல் மற்றும் பிற்பகல்) ஆகிய தேதிகளில் இந்தியஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி அலுவலர்களையும் கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்டு குழு அமைக்கப்பட்டு மாதிரி ஆளுமைத்தேர்வும் நடைபெற உள்ளது.
ஆளுமைத் தேர்வுக்கு, புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ.2000/-வழங்கப்படுகிறது. மேலும், பத்து நாட்கள் தமிழ் நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் இப்பபயிற்சி மையத்தால்செய்யப்பட்டு வருகிறது.
மாதிரி ஆளுமைத் தேர்வு பற்றிய மேலும் விவரங்களை இப்பயிற்சி மைய இணையதளத்தில் www.civilservicecoaching.com-ல் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் 044-24621475.