ஐ.பி.எல் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஐதராபாத்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு நேரடியாக பெங்களூர் அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில் அந்த அணியுடன் மோதுவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி, குஜராத் அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஃபின்ஸ் 50 ரன்களும், மெக்கல்லம் 32 ரன்களும் எடுத்தனர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஐதராபாத் அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. வார்னர் மிக அபாரமாக விளையாடி 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை பெங்களூரில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும்.