ஒட்டப்பிடாரத்தில் கமல்ஹாசன் பிரசாரம் ரத்து
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று அவருடைய பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது
ஒட்டப்பிடாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டுமின்றி இனிவரும் நாட்களிலும் அவர் பிரச்சாரம் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் குறித்த பேச்சால் இந்து மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது