ஒன்பது வருடங்களுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய ‘வில்லு’ படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நிலையில் ஒன்பது வருடங்களுக்கு பின் மிண்டும் தற்போது ‘தளபதி 63 படத்தில் இணையவுள்ளனர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகவுள்ள ‘தளபதி 63’ படத்தின் நாயகி நயன்தாரா என ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
சமீபகாலமாக நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டும் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளதால், இந்த படத்தில் அவருடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A heroine needs to be Strong, Smart and add Strength to the Story AGS is super happy to announce that our very own #Nayan has come on board #Thalapathy63 Like all fans I am super excited to see our #Thalapathy #Nayan combo on screen after a longtime @Atlee_dir #Ags pic.twitter.com/krrla9cBuU
— Archana Kalpathi (@archanakalpathi) November 25, 2018