ஒபாமாவை தேடி வரும் நீதிபதி பதவி: ஏற்பாரா? மறுப்பாரா?

ஒபாமாவை தேடி வரும் நீதிபதி பதவி: ஏற்பாரா? மறுப்பாரா?

முன்னாள் அமெரிக்க அதிபர் விரும்பினால் அவருக்கு நீதிபதி பதவி தர தயார் என அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்த பதவியை ஏற்பது குறித்து ஒபாமா இதுவரை எந்தவித பதிலையும் அளிக்கவில்லை

அதிபர் ஆவதற்கு முன்னர் ஒபாமா சிக்காக்கோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் 12 ஆண்டுகள் சட்ட பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு நீதிபதிக்கு உள்ள தகுதி அனைத்தும் அவருக்கு இருப்பதால் அவருக்கு நீதிபதி பதவி தர முன்வந்துள்ளதாக இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது.

ஒபாமா நீதிபதி பதவியை ஏற்று கொண்டால் முன்னாள் அதிபர் ஒருவர் நீதிபதியாவது முதல்முறை என்ற பெருமையை பெறுவார். ஆனால் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதுகுறித்து கூறியபோது அவருக்கு நீதிபதி பதவியில் விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply