ஒப்போ F5 யூத் வெளியானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
ஒப்போ F5 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகமாகியுள்ளது. 6.0 இன்ச் 18:9 டிஸ்ப்ளே மற்றும் டவுன்கிரேடு செய்யப்பட்ட கேமரா கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கருப்பு மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்கும் ஒப்போ F5 யூத் PHP 13,990 அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,835 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ F5 மாடலின் குறைந்த விலை மாடலாக இது இருக்கிறது. முந்தைய ஒப்போ F5 போன்று இல்லமால் புதிய F5 சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இத்துடன் சில சிறப்பம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒப்போ F5 யூத் சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச், FHD+2160×1080 பிக்சல் டிஸ்ப்ளே
– மீடியாடெக் ஹீலியோ P23 பிராசஸர்
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– ஆண்ட்ராய்டு7.1 நௌக்கட் சார்ந்த கலர் ஓ.எஸ். 3.2
– டூயல் சிம், 4ஜி, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்ஏஎச் பேட்டரி
புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் முக அங்கீகார வசதி வழங்கப்ட்டுள்லது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 200 புள்ளிகளை கண்டறிந்து ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்யும். இதே போன்று அழகிய செல்ஃபி புகைப்படங்களை எடுக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.