ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா திடீர் நீக்கம்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2-1 என்று டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை செய்திருக்கும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து செல்லவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்படவில்லை என்றும், பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை போட்டி நெருங்கி வரும் நிலையில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.