ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய்?! விஜயகாந்த் ஆவேசம்
ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்களை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டே வழிவகுத்துவிட்ட நிலையில் தமிழக அமைச்சரவை இதுகுறித்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் தமிழக கவர்னர்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய்?! அதிமுகவினர் 3 பேரை விடுதலை செய்ய தமிழகஅரசு பரிந்துரை செய்ததுபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழகஅரசு மெத்தனமாக இல்லாமல் விரைந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி, விஜயகாந்த், கவர்னர், விடுதலை